ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்!!! : ஐபிஎல் வாய்ப்பு பறிபோகுமா?

yusuf pathan doping news Tamil
(yusuf pathan doping news Tamil)

இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான யூசுப் பதானுக்கு பிசிசிஐ பிற்போடப்பட்ட 5 மாத போட்டித் தடையை விதித்துள்ளது.

சட்டவிரோதமான ஊக்கமருந்தொன்றை உட்கொண்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து யூசுப் பதானுக்கு தடை விதித்துள்ளது.

அதிரடி துடுப்பாட்ட வீரரான யூசுப் பதான் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல் அணிக்காக விளையாட ஆரம்பித்து, இறுதியாக கொல்கத்தா அணிக்கு விளையாடியிருந்தார்.

இதில் இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரொன்றில் பரொடா அணிக்காக பதான் விளையாடி வருகின்றார். இதன்போது பதானுக்கு ஊக்கமருந்து பரிசோதனையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையின் போது பதான், டெர்புயூடேலின் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிசிசிஐ அவருக்கு பிற்போடப்பட்ட 5 மாதத் போட்டித் தடையை விதித்துள்ளது.

இதுதொடர்பில் பிசிசிஐக்கு கருத்து தெரிவித்துள்ள யூசுப் பதான், தான் தெரிந்து குறித்த மருந்தை உட்கொள்ளவில்லையென்றும், சுகயீனத்துக்காக உட்கொண்ட மருந்தில் குறித்த ஊக்கமருந்து கலக்கப்பட்டிருப்பது தனக்கு தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள யூசுப் பதான் இவ்வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : yusuf pathan doping news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here