“எங்களது ஒரே இலக்கு விராட் கோஹ்லிதான்” : பில்லெண்டர்!

Vernon Philander bowling vs India 2018
(Vernon Philander bowling vs India 2018)

இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 72 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது.

போட்டியின் வெற்றி இந்திய அணியின் கைவசமிருந்தாலும், தனது அபார பந்து வீச்சாள் தென்னாபிரிக்க அணிக்கு பில்லெண்டர் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் அணியின் பந்து வீச்சு நோக்கம் தொடர்பில் பில்லெண்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “எங்களது முழு நோக்கமும் விராட் கோஹ்லியை ஆட்டமிழக்க செய்வதில் இருந்தது. அவர்தான் எங்களது பிரதான இலக்கு. அவரை ஆரம்பத்தில் ஆட்டமிழக்கச் செய்ய முடியுமானால் அணியிக் வெற்றியை எளிதுப்படுத்த முடியும் என முடிவுசெய்தோம்.

இதனால் புதிய யுத்தியொன்றை கையாண்டு, கோஹ்லிக்கு அவுட் ஸ்விங் பந்துகளை வீசினேன். அதில் ஒரு பந்தில் அவரை ஆட்டமிழக்கச் செய்ய முடிந்தது. இதனால் எங்களது வெற்றியும் இலகுவானது” என தெரிவித்தார்.

இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பில்லெண்டர் முதல் இன்னிங்ஸில் 3 விக்கட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கட்டுகளையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Vernon Philander bowling vs India 2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here