(ricky ponting australian Coach news Tamil)
நியூஸிலாந்து – இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இருபதுக்கு-20 தொடரின் அவுஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக ரிக்கி பொன்டிங் செயற்படவுள்ளார்.
குறித்த விடயத்தினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை இன்று உறுதிசெய்துள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான ரிக்கி பொன்டிங், தற்போதைய பயிற்றுவிப்பாளர் டெரன் லெஹ்மனின் கீழ் பணிபுரிவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
43 வயதான ரக்கி பொன்டிங் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டதுடன், கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி அணியின் பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் இவரது இருபதுக்கு-20 ஆளுமைகளை கருத்திற்கொண்டு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும் கடந்த வருடம் இலங்கை அணிக்கெதிராக நடைபெற்ற இருபதுக்கு-20 தொடரில் அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளராக ரிக்கி பொன்டிங் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
<<Related News>>
- தொடர் வெற்றிகளை குவிக்கும் மென்செஸ்டர் சிட்டி!!!
- ஹதுருசிங்க மற்றும் இலங்கை வீரர்களை கடுமையாக விமர்சித்த பங்களாதேஷ் வீரர்!!!
- பிக்பேஷ் லீக் : பிரிஷ்பேன் ஹேட் திரில் வெற்றி!!!
- பிரீமியர் லீக் : இறுதிக்கட்டத்தில் தோல்வியிலிருந்து தப்பியது மென்செஸ்டர் யுனைடட்!!!
- பங்களாதேஷ் செல்கிறது இலங்கை!!! : போட்டி அட்டவணை வெளியானது!!!
- முன்னணி வீரர்களால் முடியாத சாதனையை முறியடித்த ஹர்ரி கேன்!!!
- புதிய சேர்வ் (serve) விதிமுறை தொடர்பில் பிவி சிந்து கருத்து!!!
- இரண்டே நாட்களில் முடிந்த நான்கு நாள் டெஸ்ட் போட்டி… : இன்னிங்ஸ் வெற்றிபெற்றது தென்னாபிரிக்கா!!!
<<Our other websites>>
Tegs : ricky ponting australian Coach news Tamil