உபாதையிலிருந்து மீண்ட ஜொகோவிச்சுக்கு முதல் வெற்றி!

Novak Djokovic news Tamil
(Novak Djokovic news Tamil)

12 தடவைகள் கிரான்ஸ்லாம் பட்டம் வென்ற சேர்பிய வீரர் நொவெக் ஜொகோவிச் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் குயோங் டென்னிஸ் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற விம்பில்டன் காலிறுதிப்போட்டியில் வைத்து நொவெக் ஜொகோவிச் கடுமையான முழங்கை உபாதைக்கு உள்ளானார்.

இதனால் முக்கிய தொடர்களிலும் அவர் கலந்துக்கொள்ளவில்லை.
தற்போது உபாதை குணமாகியுள்ள நிலையில், மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் விளையாட ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற குயோங் டென்னிஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம்’ஐ எதிர்கொண்டார். இந்த போட்டியில் அபாரமாக ஆடிய ஜொகோவிச் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

முதலாவது செட்டை 6-1 என கைப்பற்றி ஜொகோவிச், இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றி, வெற்றிபெற்றார்.

இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஜொகோவிச் அவுஸ்திரேலிய ஓபனில் விளையாடுவதை உறுதிசெய்துள்ளார்.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Novak Djokovic news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here