ஈ.எப்.எல். கிண்ணம் : அரையிறுதியின் முதல் லீக் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி திரில் வெற்றி!

manchester city news Tamil
(manchester city news Tamil)

இங்கிலாந்தின் உள்ளூர் கலகங்களுக்கிடையில் நடைபெற்றுவரும் ஈ.எப்.எல். உதைப்பந்தாட்ட தொடரின் அரையிறுதியின் முதலாவது லீக் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணி திரில் வெற்றிபெற்றுள்ளது.

மென்செஸ்டர் சிட்டியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற பிரிஸ்டோல் சிட்டி மற்றும் மென்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின.

இந்த போட்டியின் முதல் கோல் 44வது நிமிடத்தில் பெனால்டி மூலம் பெறப்பட்டது. பிரிஸ்டோல் சிட்டி அணியின் பொபி ரீட் குறித்த பெனால்டியை கோலாக மாற்றி அணியை முன்னிலைப்படுத்தினார்.

முதலாவது பாதியில் 1-0 என்ற முன்னிலையுடன் பிரிஸ்டோல் அணி திடமான நிலையில் இருந்தது.

எனினும் இரண்டாவது பாதியில், போட்டியின் 55வது நிமிடத்திவ் மென்செஸ்டர் சிட்டி அணியின் கெவின் டி பிரயன் கோலடித்து, போட்டியை 1-1 என சமப்படுத்தினார்.

பின்னர் இரண்டு அணிகளும் கோலடிக்க தவறிய நிலையில், மேலதிக நேரம் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தை சிறப்பாக பயன்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணி 90+2வது நிமிடத்தில் செர்ஜியோ அகுயேரோ உதவியுடன் கோலடித்து, திரில் வெற்றிபெற்றது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : manchester city news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here