இலங்கை அணியிடம் படுதோல்வியடைந்த அவுஸ்திரேலியா!

Blind Cricket world cup news Tamil
(Blind Cricket world cup news Tamil)

டுபாய் மற்றும் பாகிஸ்தானில் ஆரம்பித்து நடைபெற்று வரும் கட்புலனற்றோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 303 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் கட்புலனற்றோருக்கான உலகக்கிண்ண போட்டிகள் டுபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றது.

இதில் டுபாயின் அஜ்மான் ஓவல் மைதானத்தில் தங்களது முதல் போட்டியில் விளையாடிய இலங்கை அணி பலம்வாய்ந்த அவுஸ்திரலிய அணியை எதிர்கொண்டது.

போட்டியின் ஆரம்பத்தில் மழை குறுக்கிட்டதால் அணிக்கு 35 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 35 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 485 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை அணிசார்பில் சுரங்க சம்பத் 12 பவுண்டரிகள் அடங்கலாக 130 ஓட்டங்களையும், ருவன் வசந்த 111 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 29.4 ஓவர்களில் 182 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து 303 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்தது.

இலங்கை அணிசார்பில் அபாரமாக பந்து வீசிய உபுல் சன்ஜீவ 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Blind Cricket world cup news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here