குயோங் டென்னிஸில் நடால் தோல்வி! : அவுஸ்திரேலிய ஓபனில் விளையாடுவாரா?

Rafael Nadal news Tamil today
(Rafael Nadal news Tamil today)

அவுஸ்திரேலியாவில் இன்று ஆரம்பமாகியுள்ள குயோங் டென்னிஸ் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய ஸ்பெயினின் முன்னணி வீரர் ரபேல் நடால் தோல்வியடைந்துள்ளார்.

இன்று காலை நடைபெற்ற இந்த போட்டியில் நடால் 4-6 மற்றும் 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

நடால் முழங்கால் உபாதையால் அவதிப்பட்டு வருவதால், இறுதியாக நடைபெற்ற பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார். பின்னர் தனது உடற்தகுதியை பரிசோதிப்பதற்காக குயோங் டென்னிஸ் தொடரில் விளையாடி வருகின்றார்.

இந்நிலையில் தோல்வியடைந்துள்ள நடால் அவுஸ்திரேலிய ஓபனில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்து வந்தது.

எனினும் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ள நடால், அவுஸ்திரேலிய ஓபனில் விளையாடுவதை உறுதிசெய்துள்ளார். எதிர்வரும் இரண்டு நாட்களில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, அவுஸ்திரேலிய ஓபனில் விளையாட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Rafael Nadal news Tamil today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here