எப்.ஏ கிண்ணம் : மூன்றாவது சுற்றில் பிரைட்டன் அணி வெற்றி!

Brighton beat Crystal Palace FA Cup news Tamil
(Brighton beat Crystal Palace FA Cup news Tamil)

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் எப்.ஏ கிண்ண உதைப்பந்தாட்டத் தொடரின் மூன்றாவது சுற்றில் பிரைட்டன் ஹோவ் எல்பியோன் அணி வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நொக்கவுட் முறையில் நடைபெறும் எப்.ஏ கிண்ணத் தொடரின் நேற்றைய மூன்றாவது சுற்றில் பிரைட்டன் அணி கிரிஸ்டெல் பெலஸ் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியின் ஆரம்பத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்திய பிரைட்டன் அணி, முதற்பாதியின் 25வது நிமிடத்தில் கோலடித்தது. குறித்த கோலை ஸ்டீபன்ஸ் அடிக்க, கிரிஸ்டெல் பெலஸ் அணியால் முதற்பாதியில் கோலடிக்க முடியவில்லை.

எனினும் பின்னர் தொடங்கிய இரண்டாவது பாதியில் பின்னடைவிலிருந்த கிரிஸ்டல் பெலஸ் அணி 69 நிமிடத்தில் சகோவின் உதவியுடன் கோலடித்து போட்டியை சமப்படுத்தியது.

தொடர்ந்து போட்டி சூடுபிடிக்க, இறுதி சில நிமிடங்களில் பிரைட்டன் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரைட்டன் அணியின் கிளேன் முர்ரே போட்டி நிறைவடைய 3 நிமிடங்கள் இருக்கும் போது, அசத்தலான கோல் ஒன்றை அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இந்த போட்டியில் தோல்வியை தழுவிய கிரிஸ்டல் பெலஸ் அணி, எப்.ஏ கிண்ணத்திலிருந்து வெளியேறியது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Brighton beat Crystal Palace FA Cup news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here