லைனல் மெஸ்ஸி புதிய சாதனை!!!

Lionel Messi news Tamil today
(Lionel Messi news Tamil today)

லா லீகா உதைப்பந்தாட்ட தொடரில் நேற்று நடைபெற்ற பார்சிலோனா மற்றும் லெவாண்டே அணிகளுக்கிடையிலான லீக் போட்டியில் பார்சிலோனா அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் எதிரணிக்கு இறுதிவரை கோல்கள் அடிக்கும் வாய்ப்புகளை வழங்காத பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் தனது 400வது லா லீகா போட்டியில் விளையாடிய லைனல் மெஸ்ஸி போட்டியின் 12வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.

இந்த கோலின் மூலம் ஐரோப்பியாவில் நடைபெறும் 5 பெரும் உதைப்பந்தாட்ட தொடர்களில், ஒரு தொடரில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையை மெஸ்ஸி சமப்படுத்தியுள்ளார்.

மெஸ்ஸி லா லீகா தொடரின் 400 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 365 கோல்களை அடித்து, ஜேர்மனியின் முன்னாள் வீரரான கேர்ட் முல்லரின் சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

பெயர்ன் முன்சென் அணிக்காக விளையாடிய கேர்ட் முல்லர் 427 பண்டெஸ் லீகா போட்டிகளில் விளையாடி 365 கோல்களை அடித்து சாதனைப்படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Lionel Messi news Tamil today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here