எப்.ஏ கிண்ணம் : மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறிய அர்செனல்!!!

FA Cup news Tamil
(FA Cup news Tamil)

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் எப்.ஏ கிண்ண உதைப்பந்தாட்டத் தொடரின் மூன்றாவது சுற்றில் அர்செனல் அணி அதிர்ச்சித் தோல்வியடைந்து, வெளியேறியுள்ளது.

நொக்கவுட் முறையில் நடைபெறும் எப்.ஏ கிண்ணத் தொடரின் நேற்றைய மூன்றாவது சுற்றில் அர்செனல் அணி நொட்டிங்ஹம் போரஸ்ட் அணியை எதிர்கொண்டது.

13 தடவைகள் எப்.ஏ கிண்ணத்தை கைப்பற்றிய, பலம்வாய்ந்த அணியான அர்செனல் 2-4 என்ற கோல்கள் அடிப்படையில் நொட்டிங்ஹம் போரஸ்ட் அணியிடம் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது.

போட்டியின் ஆரம்ப கோலை நொட்டிங்ஹம் அணி லிசார்ஜின் உதவியுடன் 20வது நிமிடத்தில் அடித்தது. பின்னர் குறித்த முன்னிலை ஒருசில நிமிடங்களில் தகர்த்த அர்செனல் அணி 23வது நிமிடத்தில் மெர்டசெகரின் உதவியுடன் கோலடித்து போட்டியை சமப்படுத்தியது.

பின்னர் 44வது நிமிடத்தில் நொட்டிங்ஹம் போரஸ்ட் அணியின் லிசார்ஜ் மீண்டுமொரு கோலை அடிக்க, நொட்டிங்ஹம் போரஸ்ட் அணி முதற்பாதியில் 2-1 என முன்னிலைப்பெற்றது.

இந்நிலையில் 2-1 என்ற முன்னிலையுடன் இரண்டாம்பாதியை ஆரம்பித்த நொட்டிங்ஹம் போரஸ்ட் அணியின் பிரேரடோன் 64வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பபை பயன்படுத்தி கோலடிக்க, நொட்டிங்ஹம் அணியின் முன்னிலை 3-1 ஆக உயர்ந்தது.

தொடர்ந்து 85வது நிமிடத்திலும் நொட்டிங்ஹம் போரஸ்ட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. குறித்த பெனால்டியை கோலாக மாற்றிய டௌவெல் கோலடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இரண்டாவது பாதியில் பல முயற்சிகளை மேற்கொண்ட அர்செனல் அணியால் 79வது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க முடிந்தாலும், மேலதிக கோல்களை அடிக்க முடியாமல் 2-4 என தோல்வியை தழுவியது.

எப்.ஏ கிண்ண வரலாற்றை பொருத்தவரையில் 1996ம் ஆண்டுக்கு பின்னர் எப்.ஏ கிண்ணத்தின் மூன்றாவது சுற்றில் அர்செனல் அணி தோல்வியடைந்துள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பம் ஆகும்.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : FA Cup news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here