FA CUP : நான்காவது சுற்றுக்கு முன்னேறியது மென்செஸ்டர் யுனைடட்!

FA Cup 2018 news Tamil today
(FA Cup 2018 news Tamil today)

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் நொக்கவுடன் முறையிலான எப்.ஏ கிண்ண உதைப்பந்தாட்ட தொடரின் 4வது சுற்றுக்கு மென்செஸ்டர் யுனைடட் அணி தகுதிபெற்றுள்ளது.

எப்.ஏ கிண்ணத்தின் நேற்றைய போட்டியில் மென்செஸ்டர் யுனைடட் மற்றும் டெர்பே கவுண்டி அணிகள், ஓல்ட் ட்ரெபோர்ட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்து இரண்டு அணிகளும் கோலடிக்கும் வாய்ப்புகளை தவறவிட, முதற்பாதி கோல்கள் இன்றி 0-0 என நிறைவடைந்தது.

இதேநிலை இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலும் இடம்பெற்றது. எனினும் போட்டியின் இறுதிப்பகுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடட் அணி, 84வது நிமிடத்தில் தங்களது முதல் கோலை அடித்தது.

லிங்கார்ட் குறித்த கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்த, போட்டியின் இறுதி நிமிடத்தில் (90) லுகாகு மீண்டுமொரு கோலை அடித்து அணியின் வெற்றியை 2-0 என உறுதிசெய்தார்.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : FA Cup 2018 news Tamil today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here