“பிளேட் பேப் வேண்டாம்…” : பரா-தடகள வீராங்கனை ஷோபி கம்ளிஷ்

ab de villiers says preparation india series news today tamil

(Para-athlete Sophie Kamlish news today Tamil)

பிரித்தானியாவைச் சேர்ந்த உலக பரா-தடகள வீராங்கனை ஷோபி கம்ளிஷ் (Sophie Kamlish) இனிவரும் காலங்களில் தன்னை “பிளேட் பேப்” (Blade Babe) என அழைக்கவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

21 வயதான குறித்த வீராங்கனையின் ஒரு கால் பிறவியிலேயே சற்று சிறிதாக இருந்ததால், இவர் 7 வயது முதல் “பிரொஸ்தெடிக் பிளேட்” (prosthetic blade) எனும் செயற்கை காலை அணிந்து, பந்தயங்களில் கலந்துக்கொண்டு வருகின்றார்.

இதேபோன்று டட்ச் நாட்டைச் சேர்ந்த மூன்று முறை பரா ஒலிம்பிக் சம்பியன் பட்டம் வென்ற மர்லோவு வென் ரிஹிஜ்ன் என்ற வீராங்கனையும் இரண்டு கால்களிலும் “பிரொஸ்தெடிக் பிளேட்” பொருத்தி போட்டிகளில் பங்கேற்று வருகின்றார். இவரும் “பிளேட் பேப்” என மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றார்.

எனினும் தன்னை “பிளேட் பேப்” என அழைப்பது தொடர்பில் ஷோபி கம்ளிஷ் கருத்து வெளியிட்டுள்ளார்.

“பிளேட் பேப்” என அழைப்பதை நான் அவமரியாதையாக நினைக்கவில்லை.எனினும் அதை நான் பெருமையாகவும் எண்ணவில்லை. இவ்வாறு என்னை அழைப்பதால் நான் சற்று அசௌகரியமாக உணருகிறேன். இதனால் “பிளேட் பேப்” என அழைப்பதை நான் விரும்பவில்லை.

இதேவேளை பாரா-போட்டிகளில் கலந்துக்கொள்ளும் ஆண்களை யாரும் இவ்வாறு பெயரிட்டு அழைப்பதில்லை. பெண்களை மாத்திரமே இவ்வாறு குறிப்பிடுகின்றனர். இதனால் ஒரு பாலினத்தை மாத்திரம் இவ்வாறு அழைப்பதை நான் கண்டுகொண்டுள்ளேன். இதனால் இவ்வாறு அழைப்பதை நான் விரும்பவில்லையென” தெரிவித்துள்ளார்.

ஷோபி கம்ளிஷ் இவ்வருடம் ஜுலை மாதம் லண்டனில் நடைபெற்ற உலக பரா சம்பியன்ஷிப்பில் நடைபெற்ற T44 போட்டியில் சாதனையுடன் கூடிய சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Para-athlete Sophie Kamlish news today Tamil, Sports news in Tamil, Motor sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here