பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவில் பங்கேற்கும் பளுதூக்கல் வீரர்களின் விபரம் வெளியானது!!!

Sri Lanka weightlifting Participation commonwealth games 2018 news

(Sri Lanka weightlifting Participation commonwealth games 2018 news)

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொள்ளவுள்ள இலங்கையைச் சேர்ந்த 11 பளுதூக்கல் வீர, வீராங்கனைகளின் பெயர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், 7 வீரர்கள் மற்றும் 4 வீராங்கனைகள் கலந்துக்கொள்ளவுள்ளதுடன், இதில் 6 பேர் முதற்தடவையாக போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரம் :

1. திலங்க பலகசிங்க (62 கிலோகிராம் எடைப்பிரிவு)
2. சின்தன கீதால் விதானகே (77 கிலோகிராம் எடைப்பிரிவு)
3. ஜே. ஏ சதுரங்க லக்மால் (56 கிலோகிராம் எடைப்பிரிவு)
4. சானக மதுஷங்க பீடர்ஸ் (94 கிலோகிராம் எடைப்பிரிவு)
5. இந்திக சதுரங்க திசாநாயக்க (69 கிலோகிராம் எடைப்பிரிவு)
6. ஏ.ஜி சமன் அபேவிக்ரம (105 கிலோகிராம் எடைப்பிரிவு)
7. டபிள்யு. பி.உஷான் சாருக (105 கிலோகிராமுக்கு மேற்பட்ட எடைப்பிரிவு)
8. பி. சதுரிகா பிரியந்தி (75 கிலோகிராம் எடைப்பிரிவு)
9. நதீஷானி ராஜபக்ஷ (58 கிலோகிராம் எடைப்பிரிவு)
10. ஹங்சனி தோமஸ் (48 கிலோகிராம் எடைப்பிரிவு)
11. சமரி வர்ணகுலசூரிய (53 கிலோகிராம் எடைப்பிரிவு)

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Sri Lanka weightlifting Participation commonwealth games 2018 news, Sports news in Tamil, Motor sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here