ஹொங்கொங் அணியிடம் படுதோல்வியை சந்தித்தது இலங்கை!!!

Hong Kong U17 rugby Girls team beat Sri Lanka 2017

(Hong Kong U17 rugby Girls team beat Sri Lanka 2017)

டுபாயில் நடைபெற்றுவரும், கனிஷ்ட ஒலிம்பிக் போட்டிகளுக்கான , ஆசிய ரக்பி தகுதிகாண் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

ஹொங்கொங் அணிக்கு எதிரான இந்த போட்டியில், இலங்கை அணி 35-5 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியடைந்தது.

ஆரம்பம் முதல் புள்ளிகளை பெறத்தவறிய இலங்கை அணி முதற்பாதியில் 0-18 என்ற மிகப்பெரிய பின்னடைவை பெற்றது.

பின்னர் இடம்பெற்ற இரண்டாவது பாதியில், முதல் சுற்றைவிட சிறப்பாக ஆடினாலும், இலங்கையால் 5 புள்ளிகளை மாத்திரமே பெறமுடிந்தது.

எனினும் ஹொங்கொங் அணி ஆட்டநேர முடிவில் 35 -05 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

<<More News>>

<<Our other websites>>

Tegs : Hong Kong U17 rugby Girls team beat Sri Lanka 2017, Sports news in Tamil, Motor sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here