டயலொக் ரக்பி லீக் : கண்டி கழகம் அபார வெற்றி!

Kandy Sports Club beat Airmen Dialog Rugby League 2017

(Kandy Sports Club beat Airmen Dialog Rugby League 2017)

டயலொக் ரக்பி லீக் போட்டித்தொடரில் இராணுவ அணிக்கெதிரான போட்டியில் கண்டி கழகம் 58-13 என்ற புள்ளிகள் அடிப்படையில் அபார வெற்றிபெற்றது.

இராணுவ அணி மற்றும் கண்டி அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி கழகத்தின் சொந்த மைதானமான நித்தவள மைதானத்தில் நடைபெற்றது.
லீக் போட்டிகளில் தோல்விகளை சந்திக்கமால் முன்னேறிவரும் கண்டி அணி முழு நம்பிக்கையுடன் போட்டியை எதிர்கொண்டது.

ஆரம்பம் முதலே பலமான அணி என்றவகையில் ஆதிக்கத்தை செலுத்திய கண்டி அணி, முதற்பாதியில் மிகப்பெரிய முன்னேற்றத்துடன், இராணுவ அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. கண்டி அணி முதற்பாதியில் 34-06 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலைப்பெற்றது.

தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் தங்களது ஆதிக்கத்தை முழுமையாக வைத்துக்கொண்ட கண்டி அணி, புள்ளிகளை குவித்தது. எனினும் இராணுவ அணியால் குறைந்த புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
போட்டியின் முடிவில் கண்டி கழகம் 58-13 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Kandy Sports Club beat Airmen Dialog Rugby League 2017, Sports news in Tamil, Motor sports

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here