பிரிட்டனின் முன்னணி டைவிங் வீராங்கனை ஓய்வு!!!

Britain Tonia Couch retired 2017

(Britain Tonia Couch retired 2017)

3 தடவைகள் ஒலிம்பிக் டைவிங் விளையாட்டில் பங்குகொண்டிருந்த பிரிட்டன் வீராங்கனை டொனியா கோச் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

டொனியா கோச் பிரித்தானியாவின் முன்னணி டைவிங் வீராங்கனையாக செயற்பட்டு வந்தார். இவர் 2014ம் ஆண்டு நடைபெற்ற கொமன்வெல்த் போட்டிகளில் பங்குகொண்டு, வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துக்கொண்டு, 2012ம் ஆண்டு தங்கப்பதக்கத்தை வெற்றிக்கொண்டிருந்ததுடன், 2013 மற்றும் 2016ம் ஆண்டுகளில் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருந்தார்.

இவர் இறுதியாக உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் கடந்த ஜுலை மாதம் பங்கேற்றிருந்தார். பின்னர் அவரது சொந்த நகரமான பிலிமௌத்தில் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார்.

ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள டொனியா கோச்,
“தான் சிந்தித்ததை விட அதிகமான வெற்றிகளை என்னால் பெறமுடிந்துள்ளது. நான் ஓய்வு பெறும் தருணம் இதுதான் என கருதுகிறேன்.

இதனால் நான் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
டொனியா கோச் 2005ம் ஆண்டு மொன்டீரியலில் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<<More News>>

<<Our other websites>>

Tags : Britain Tonia Couch retired 2017, World Athletics championship news in Tamil, Latest Athletics news in Tamil, Tamil news, latest sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here