இலங்கை கனிஷ்ட ரக்பி அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்கள்!!!

Sri Lanka U19 Rugby team head coach 2017

(Sri Lanka U19 Rugby team head coach 2017)

இலங்கை 19 வயதுக்குற்பட்டோர் ரக்பி அணியின் பயிற்றுவிப்பாளர்களாக ரஜீவ் பெரேரா மற்றும் இசிபதன கல்லூரி ரக்பி அணியின் பயிற்றுவிப்பாளர் லசந்தடி கொஸ்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

19 வயதுக்குற்பட்டோருக்கான ஆசிய ரக்பி தொடரினை கவனத்தில் கொண்டு குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆசிய ரக்பி தொடரில் சைனிஸ் தாய்பே அணி விளையாடவில்லை. அதனால் போட்டிகள் புதிய முறையில் நடத்தப்படவுள்ளன. இதில் முதற்தர பிரிவில் விளையாடவுள்ள அணிக்குழாமில் இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள் மாத்திரமே அங்கம் வகிக்கின்றன.

குறித்த இரு அணிகளும் தங்களது சொந்த நாட்டில் இரண்டு போட்டிகளில் மோதவுள்ளன. முதல் போட்டி இலங்கையில் டிசம்பரம் 10ம் திகதி நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது போட்டி ஹொங்கொங்கில் நடைபெறவுள்ளது.

ஹெவலொக் ரக்பி கழகத்தின் முன்னாள் தலைவரான பெரேரா, இறுதியாக 2012 ஆம் ஆண்டு ஓய்வுபெற்று, பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார். இதேவேளை இவர் இலங்கை தேசிய ரக்பி அணியின் முகாமையாளராகவும் செயற்பட்டுள்ளார்.

இதேவேளை லசந்த முதன் முறையாக தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கபட்டிருந்தாலும், தேசிய அணிக்கு பல வெற்றிளை பெற்றுக்கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Sri Lanka U19 Rugby team head coach 2017, Sports news in Tamil, Motor sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here