மகளிர் ரக்பி உலகக்கிண்ணம் : அயர்லாந்து, நியுஸிலாந்து அணிகள் வெற்றி!

Ireland New Zealand wins 1st Match Womens Rugby world Cup

Ireland New Zealand wins 1st Match Womens Rugby world Cup

மகளிர் உலகக்கிண்ண ரக்பி தொடர் அயர்லாந்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இத்தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு முக்கியமான அணிகள் மோதிய போட்டியில் அயர்லாந்து மற்றும் நியுஸிலாந்து அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

சொந்த மண்ணில் விளையாடிவரும் அயர்லாந்து அணி அவுஸ்திரேலிய அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் கடுமையான போட்டிக்கு மத்தியில் விளையாடிய அயர்லாந்து அணி 19-17 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

முதல் பாதியில் 7-5 என்ற முன்னிலை வகித்த அயர்லாந்து அணி, இரண்டாவது பாதியில் சவாலுக்கு மத்தியில் புள்ளிகளை பெற்று வெற்றிபெற்றது.

இதேவேளை பலம்பொருந்திய நியுஸிலாந்து அணியை எதிர்கொண்ட வேல்ஸ் அணி 44-12 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. முதல் பாதியில் நியுஸிலாந்து அணி 20 புள்ளிகளை பெற, வேல்ஸ் அணியால் ஒரு புள்ளிகளையும் பெறமுடியாமல் இருந்தது. எனினும் இரண்டாவது பாதியில் வேல்ஸ் அணி 12 புள்ளிகளை பெற, நியுஸிலாந்து அணி இரண்டாவது பாதியில் 24 புள்ளிகளை பெற்று 44-12 என வெற்றிபெற்றது.

<<More News>>

<<Our other websites>>

Ireland New Zealand wins 1st Match Womens Rugby world Cup, Rugby news in Tamil, Sports news in Tamil, Latest rugby news in Tamil, Live Rugby updat

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here