மஹேல, சங்கா மற்றும் முரளிக்கு அழைப்பு விடுத்த விளையாட்டுத்துறை அமைச்சர்!!! : ஏன் தெரியுமா?

sports minister request Sanga Mahela Murali news Tamil

மஹேல, சங்கா மற்றும் முரளியை கிரிக்கெட் சபையுடன் இணைக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்காளான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன், ரொஷான் மஹானாம மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோருக்கு புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஷ்தப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் ஆலோசானைக்குழுவொன்றை அமைப்பதற்காக இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு மற்றும் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு இடையில் இன்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, மேற்குறிப்பிட்ட முன்னாள் வீரர்களை ஆலாசனைக்குழுவாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ரீதியில் கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த கருத்துகளை அவதானித்த கிரிக்கெட் சபை, இதுதொடர்பான கடிதம் ஒன்றை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அனுப்பிவைத்துள்ளது.

இதில் மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, ரொஷான் மஹானாம மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரை குழுவாக நியமிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனை சுழற்பந்து ஆலாசகராக நியமிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன், ரொஷான் மஹானாம மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரை தங்களுடன் இணைந்து செயற்படுவதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.

<<Tamil News Group websites>>

sports minister request Sanga Mahela Murali news Tamil, sports minister request Sanga Mahela Murali news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here