மழையால் தடைப்பட்ட போட்டி மீண்டும் ஆரம்பமானது!

India vs Afghanistan 1st test Rain news Tamil

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி மழைக் காரணமாக பாதிக்கப்பட்டு, மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி தங்களது முதல் விக்கட்டினை மாத்திரம் இழந்து 248 ஓட்டங்களை குவித்துள்ளது.

இதுவரையில் 45.1 பந்து ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டிருக்கும் நிலையில், இந்திய அணி 5.49 என்ற ஓட்ட வேகத்தில் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது.

உணவு இடைவேளைக்கு முன்னர் சதமடித்து 104 ஓட்டங்களை பெற்றிருந்த சிக்கர் தவான், உணவு இடைவேளைக்கு பின்னர் 3 ஓட்டங்களை மாத்திரம் மேலதிகமாக பெற்று, 107 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

முதலாவது விக்கட்டை ஆப்கானிஸ்தான் அணியின் யமின் அஹமட்ஷாய் வீழ்த்தினார். இந்த விக்கட்டினை வீழ்த்தியதன் ஊடாக ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் டெஸ்ட் விக்கட்டை வீழ்த்தியவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இதேவேளை இந்திய அணியின் சார்பில் தற்போது துடுப்பெடுத்தாடி வரும் முரளி விஜய் 94 ஓட்டங்களுடனும், கே.எல். ராஹுல் 33 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

<<Tamil News Group websites>>

India vs Afghanistan 1st test Rain news Tamil, India vs Afghanistan 1st test Rain news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here