ஃபீவர் ட்ரீ சம்பியன்ஸிப் தொடரில் விளையாடுகிறார் ஜொகோவிச்

Fever-Tree Championships 2018 latest news Tamil

இலண்டனின் குயின்ஸ் கிளப்பில் நடைபெறவுள்ள ஃபீவர் ட்ரீ சம்பியன்ஸிப் டென்னிஸ் தொடரில் நொவெக் ஜொகோவிச் விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சுமார் 8 வருடங்களுக்கு பின்னர் இந்த தொடரில் ஜொகோவிச் விளையாடவுள்ளார்.

ஜொகோவிச் பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் தோல்வியுற்ற நிலையில், ஃபீவர் ட்ரீ சம்பியன்ஸிப் டென்னிஸ் தொடரில் விளையாட மாட்டார் என அறிவித்திருந்தார்.

எனினும் அந்த முடிவை மாற்றிக்கொண்டுள்ள ஜொகோவிச் ஃபீவர் ட்ரீ சம்பியன்ஸிப் தொடரில் விளையாட முடிவுசெய்துள்ளார்.

ஃபீவர் ட்ரீ சம்பியன்ஸிப் தொடரில் டென்னிஸ் தரப்படுத்தலில் முதல் 30 இடங்களை பிடித்துள்ள வீரர்கள் பங்கேற்பார்கள்.

போட்டித் தொடர் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜொகோவிச், விம்பிள்டன் தொடருக்கான சிறந்த ஆரம்பமாக இந்த போட்டித் தொடர் அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமின்றி இந்த போட்டியை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாகவும், இங்கிலாந்து மக்கள் முன்னிலையில் விளையாடவுள்ளமை மேலும் மகிழ்ச்சியளிப்பதாகவுமு் தெரிவித்துள்ளார்.

<<Tamil News Group websites>>

Fever-Tree Championships 2018 latest news Tamil,Fever-Tree Championships 2018 latest news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here