11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்!!!

Rafael nadal wins French Open 2018 news Tamil

பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் சம்பியன் கிண்ணத்தை 11வது தடவையாக ஸ்பெயினின் முதற்தர வீரர் ரபேல் நடால் கைப்பற்றியுள்ளார்.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம்’ஐ எதிர்கொண்ட ரபேல் நடால் 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

போட்டியின் மூன்று செட்களையும் 6-4, 6-3 மற்றும் 6-2 என இலகுவாக கைப்பற்றினார்.

இந்த வெற்றியானது நடாலின் 17வது கிராண்ஸ்லாம் வெற்றியாகும். நடால் முதல் சுற்றில் தடுமாறியிருந்தாலும், அடுத்த சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த நடால், “11வது முறையாக பிரென்ச் ஓபன் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என்பது எனது கனவு.

நாம் ஒவ்வொரு போட்டியிலும் எப்படி விளையாடுகிறோம் என்பது மிக முக்கியம். இந்த போட்டியில் நான் சிறப்பாக விளையாடியிருந்தேன். அதற்கான கிண்ணத்தையும் வெற்றிக்கொண்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here