இரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்!

Tamilnadu aquatic championship tournament 2018

இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெற்ற 35வது நீரியல் சம்பியன்ஷிப் தொடரின் 12 வயதுக்குற்பட்ட பிரிவில் போட்டியிட்ட சென்னையைச் சேர்ந்த விஷேஷ் என்ற சிறுவன் 4 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

35வது நீரியல் சம்பியன்ஷிப் தொடர் வேளச்சேரி நீரியல் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த போட்டித் தொடரில் சென்னையில் பிறந்து டுபாயில் வசித்து வரும் விஷேஷ் பங்கேற்று, இரண்டு மாநில சாதனைகளையும் முறியடித்துள்ளதுடன், நான்கு தங்கப்பதக்கங்களையும் வென்றுள்ளார்.

விஷேஷ் 100 மீற்றர் ப்ரீஸ்டைல், 50 மீற்றர் ப்ரீஸ்டைல் போட்டிகளில்  தங்கம் வென்றதுடன், 100 மீற்றர் மற்றும் 50 மீற்றர் பெக்ஸ்ட்ரொக் போட்டிகளில் மாநிலை சாதனையுடன், தங்கப்பதக்கத்தை வெற்றி கொண்டுள்ளார்.

அதுமாத்திரமின்றி சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய விஷேஷிற்கு ஒட்டுமொத்த போட்டிகளின் அடிப்படையில் தனியொருவருக்கான சம்பியன்ஷிப் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

படங்கள் :

<<Tamil News Group websites>>

Tamilnadu aquatic championship tournament 2018, Tamilnadu aquatic championship tournament 2018

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here