டொட்டென்ஹம் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு புதிய ஒப்பந்தம்!

Tottenham manager signs new five-year contract

(Tottenham manager signs new five-year contract)

டொட்டென்ஹம் உதைப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் மோரிசியோ போச்செட்டினோவின் ஒப்பந்தக்காலம் மேலும் 5 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டள்ளது.

மோரிசியோ போச்செட்டினோ கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் அணியின் பயிற்றுவிப்பாளராக இணைந்தார்.

இவர் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய கடந்த மூன்று ஆண்டுகளும் டொட்டென்ஹம் அணி பிரீமியர் லீக் தொடரில் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளது. இறுதியாக நடைபெற்று முடிந்த பிரீமியர் லீக் சீசனிலும் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது.

இதன்படி மோரிசியோ போச்செட்டினோவின் பதவிக்காலம் எதிர்வரும் 2023ம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டுள்ளது. இவருடன் பணியாற்றிய, உதவி பயிற்றுவிப்பாளர்களான ஜீசஷ் பெரஷ், மிகுவல் டி’அகோஸ்டினோ மற்றும் டோனி ஜிமினெஸ் ஆகியோரின் ஒப்பந்தங்களும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டொட்டென்ஹம் அணியுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்தமை மகிழ்ச்சியான விடயம் என போச்செட்டினோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here