வெற்றி தோல்வி முக்கியமல்ல… : நட்புதான் முக்கியம் என உணர்த்திய பாண்டியா மற்றும் ராஹுல்!!!

hardik pandya KL Rahul Exchanges Jersey news Tamil

(hardik pandya KL Rahul Exchanges Jersey news Tamil)

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியை 3 ஓட்டங்களால் வீழ்த்தி மும்பை அணி திரில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் மும்பை அணியின் வெற்றியை விடவும் பஞ்சாப் அணியின் கே.எல். ராஹுலின் துடுப்பாட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

பஞ்சாப் அணியின் பெரும்பாலான போட்டிகளில் இறுதிவரை களத்தில் நின்று அணியின் வெற்றிக்காக கே.எல்.ராஹுல் போராடினார்.

நேற்றும் அதே பாணியில் 60 பந்துகளுக்கு 94 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த இவர், இறுதி கட்டத்தில் விக்கட்டை பறிகொடுத்தார்.

இவரின் ஆட்டமிழப்புதான் பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணம் என கட்டாயமாக கூறமுடியும். அவர் ஆட்டமிழந்த போது அவரது முகத்தில் இருந்த ஏமாற்றம் அதனை உணர்த்தியது.

போட்டி முடிந்த பின்னரும் சோகத்தில் இருந்த கே.எல். ராஹுலை, மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா சமாதானப்படுத்தினர்.

அதுமாத்திரமின்றி இருவரும் தங்களது அணி ஜேர்சிகளை மாற்றி அணிந்துக்கொண்டனர். ராஹுல் மும்பை அணியின் ஜேர்சியையும், பாண்டியா பஞ்சாப் அணியின் ஜேர்சியையும் அணிந்துக்கொண்டனர்.

இந்த புகைப்படங்கள் சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

<<Tamil News Group websites>>

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here