ஐ.பி.எல். தொடரில் அதிக ஓட்டங்களை குவித்துள்ள வீரர் யார்? : முழு விபரம் உள்ளே…

IPL 2018 latest update Tamil

(IPL 2018 latest update Tamil)

ஐ.பி.எல். தொடரின் இந்த சீசனில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷாப் பாண்ட் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஒவ்வொரு போட்டிகளிலும் அதிரடியை வெளிப்படுத்தி வரும் ரிஷாப் பாண்ட், டெல்லி அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

இவர் 12 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 4 அரைச்சதம் உட்பட 582 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இவரையடுத்து பஞ்சாப் அணியின் லோகேஸ் ராஹுல் 5 அரைச்சதங்களுடன் 558 ஓட்டங்களையும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஜொஸ் பட்லர் 5 அரைச்சதங்களுடன் 548 ஓட்டங்களையும் பெற்று முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர்.

இதையடுத்து அதிக விக்கட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் பஞ்சாப் அணியின் என்ரு டை 20 விக்கட்டுகளுடன் முதலிடத்தையும், ஹர்திக் பாண்டியா 18 விக்கட்டுகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளதுடன், 17 விக்கட்டுகளை கைப்பற்றிய பெங்களூர் அணியின் உமேஷ் யாதவ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

தொடர்ந்து அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 26 சிக்ஸர்களுடன் ரிஷப் பாண்ட் முதலிடத்தை பெற்றுள்ளதுடன், 61 பவுண்டரிகளை விளாசி, அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

 

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here