பிரீமியர் லீக் தொடரில் வரலாற்று சாதனையை படைத்தது மென்செஸ்டர் சிட்டி

manchester city vs brighton news Tamil

(manchester city vs brighton news Tamil)

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் தொடர் நிறைவுபெறும் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டித் தொடரில் அற்புமதமாக விளையாடி வரும் மென்செஸ்டர் சிட்டி அணி, இம்முறை மொத்தமாக 97 புள்ளிகளை பெற்று, ஒரு சீசனில் அதிக புள்ளிகளை பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

94 புள்ளிகளுடன் இருந்த மென்செஸ்டர் சிட்டி அணி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் பிரைட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் 3 புள்ளிகள் அதிகரித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2004-05 சீசனில் செல்ஸி அணி 95 புள்ளிகளை பெற்றிருந்தது. இதுவே பிரீமியர் லீக்கின் அதிக புள்ளிகள் சாதனையாக இருந்தது.

இந்நிலையில் மென்செஸ்டர் சிட்டி அணிக்கு இன்னுமொரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில், 100 புள்ளிகளை எட்டுவதே இலக்கு என மென்செஸ்டர் அணி தெரிவித்துள்ளது.

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here