டோனிக்கு ஓய்வு : தலைவராகிறார் வொட்சன்!!!

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான டோனி, அடுத்த போட்டியில் ஓய்வு எடுக்க கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்று, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், கடுமையான முதுகு வலியால் பாதிக்கப்பட்ட டோனி, அணியின் வெற்றியை கருத்திற்கொண்டு இறுதி வரை களத்தில் போராடி தோல்வி கண்டார்.

இந்நிலையில், அவரது முதுகுவலி குணமடையும் வரை ஓரு வார காலத்திற்கு ஒய்வில் இருக்கும் படி மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது லீக் போட்டிகளே இடம்பெறுவதால் டோனி அடுத்த போட்டியில் ஓய்வெடுக்க கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு டோனி ஓய்வெடுக்கும் பட்சத்தில் அணியின் தலைவராக ஷேன் வோட்சன் அணித்தலைவராக செயல்பட வாய்ப்பு உள்ளது.

<<Related News>>
(IPL chennai super kings captain ms dhoni shane watson)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here