பிரிமியர் லீக் சம்பியன் பட்டத்தை வென்றது மென்செஸ்டர் சிட்டி

(manchester city wins premier league 2018)

இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் உதைப்பந்தாட்ட தொடரில் இன்றைய ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியும், வெஸ்ட் புரும்விச் அல்பியான் அணியும் மோதின.

இதில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் வெஸ்ட் புரும்விக் அணியின் ஜோய் ரோட்ரிகஸ் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றி பெற செய்தார். இதனால் வெஸ்ட் புரும்விச் அணி 1-0 என்ற கணக்கில் மென்செஸ்ட்ர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

இதையடுத்து, புள்ளிப் பட்டியலில் மென்செஸ்ட்ர் யுனைடெட் அணி 86 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மென்செஸ்டர் சிட்டி அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.

இதுகுறித்து மென்செஸ்டர் சிட்டி அணி கேப்டன் வின்சென்ட் கொம்பனி டுவிட்டரில் கூறுகையில், இந்த வெற்றியை ரசிகர்களுக்கு காணிக்கை ஆக்குகிறோம் என பதிவிட்டுள்ளார்.

<<Related News>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here