போராடி தோற்றது பெங்களூர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ்!!!

IPL Royal Challengers Bangalore Rajasthan Royals win)

ஐ.பி.எல். தொடரின் பெங்களூர் றோயல்ஸ் அணிக்கெதிரான 11வது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

பெங்களூரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக சஞ்சு சம்சன் ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் சாஹல் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, 218 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பெங்களூர் றோயல்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது.

இதனால், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக, அணித்தலைவர் விராட் கோஹ்லி 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் கோபால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ராஜஸ்தான் அணி சார்பில், ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சஞ்சு சம்சன் தெரிவுசெய்யப்பட்டார்.

<<Related News>>

<<Tamil News Group websites>>

(IPL Royal Challengers Bangalore Rajasthan Royals win)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here