Friday, April 20, 2018
Home Cricket பரபரப்பான போட்டியில் வென்றது சன்ரைசஸ்!!!

பரபரப்பான போட்டியில் வென்றது சன்ரைசஸ்!!!

மும்பை இந்தியன்ஸ் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி வீழ்த்தியது.

ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நேற்றிரவு ஐ.பி.எல். தொடரின் 7ஆவது ஆட்டம் நடைபெற்றது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா, இவான் லிவீஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இந்நிலையில், 3ஆவது ஓவர் முடிவில் ஸ்டேன்லேக் பந்துவீச்சில் ஷாகிப்பிடம் பிடிகொடுத்த ரோஹித் சர்மா 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 29 ஓட்டங்களை குவித்த லிவீஸ், கௌல் பந்தில் போல்டானார். இஷான் கிஷான் 9 ஓட்டங்களுடனும், குருணல் பாண்டியா 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அவருக்கு பின் களமிறங்கிய பொல்லார்ட் 2 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 28 ஓட்டங்களுன் ஆட்டமிழந்தார். பென் கட்டிங் 9 ஓட்டங்களுடனும், சூரியகுமார் யாதவ், 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பிரதிப் சங்வான் ஓட்டம் எதுவும் பெறாமல் ஏமாற்றமளித்தார்.

இறுதியில் 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை மும்பை அணி குவித்தது.

சன்ரைசர்ஸ் தரப்பில் கௌல், ஸ்டேன்லேக், சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், ரஷீத் கான், ஷாகிப் தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.

இதையடுத்து சன் ரைசர்ஸ் அணி சார்பில் ஷிகர் தவான், ரித்திமான் சாஹா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியது.

28 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் தவான் 45 ஓட்டங்களை குவித்து, மார்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சாஹா 22 ஓட்டங்களுடன் மார்கண்டே பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.

கேன் வில்லியம்சன் 6, மணிஷ் பாண்டே 11, ஷாகிப் அல் ஹாசன் 12, யூசுப் பதான் 14 ஓட்டங்களுடனும், ரஷீத்கான், சந்தீப் சர்மா, சித்தார்த் கௌல் ஆகியோர் ஓட்டம் ஏதுமின்றி ஆட்டமிழந்து அரங்கு திரும்பினர்.

இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் அணி 148 ஓட்டங்களை குவித்து வெற்றி பெற்றது.

மும்பை அணி தரப்பில் மயங்க் மார்க்கண்டே 4, முஸ்தபுஸர் ரஹ்மான் 3, பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Don't Show This Again