எதிர்பார்ப்பின் உச்சத்தை தொட்ட போட்டி… : ரொனால்டோதான் ஹீரோ!!!

real madrid vs juventus champions league 2018

(real madrid vs juventus champions league 2018)

சம்பியன்ஸ் லீக் உதைப்பந்தாட்டத் தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற காலிறுதியின் இரண்டாவது லீக் போட்டியில் ரியல் மெட்ரிட் அணி இறுதிநொடியில் திரில் வெற்றிபெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற காலிறுயின் இரண்டாவது லீக்கில் ஜுவான்டஸ் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

முதல் லீக் போட்டியில் ரியல் மெட்ரிட் அணியிடம் 3-0 என தோல்வியடைந்த ஜுவான்டஸ் அணி, இன்றைய போட்டியில் ரியல் மெட்ரிட் அணியை தினறடித்தது.

முதற்பாதியில் அபாரமாக ஆடிய ஜுவான்டஸ் அணி 2 கோல்களை அடித்து ரியல் மெட்ரிட் அணிக்கு அதிர்ச்சிக்கொடுத்தது. போட்டியின் 2வது மற்றும் 37வது நிமிடத்தில் மஞ்சுகிக் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து ஆரம்பித்த இரண்டாவது பாதியில் ஜுவான்டஸ் அணியின் மெடுயிடி (60) மீண்டுமொரு கோலை அடித்து அணியை 3-0 என முன்னிலைப்படுத்தியதுடன், இரண்டு லீக் போட்டிகளையும் சேர்த்து 3-3 என காலிறுதியை சமப்படுத்தினார்.

இந்நிலையில் ஒரு அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமாயின் இரண்டு அணிகளில் எதாவது ஒரு அணி கோலடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

போட்டியில் மேலதிகமாக 6 நிமிடங்கள் வழங்கப்பட, அதன் 3வது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணி கோலடிக்க முற்பட அதனை தடுக்க முற்பட்ட ஜுவான்டஸ் வீரர், பெனால்டி கட்டத்துக்குள் வைத்து ரியல் மெட்ரிட் வீரரை தள்ளிவிட்டார். இதனால் நடுவர் ரியல் மெட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார்.

எனினும் குறித்த பெனால்டியை எதிர்த்து நடுவருடன் பிரச்சினையில் ஈடுபட்ட ஜுவான்டஸ் அணியின் கோல் கீப்பர் ஜியான்லூஜி பஃப்பூன் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

பின்னர் வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திய ரொனால்டோ அதனை கோலாக மாற்ற போட்டி 1-3 என முடிவடைந்தது.

இதன்படி காலிறுதியின் இரண்டு லீக்கின் முடிவடைவில் 4-3 என முன்னிலைவகித்த ரியல் மெட்ரிட் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

<<Related News>>

<<Tamil News Group websites>>

real madrid vs juventus champions league 2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here