பார்சிலோனவுக்கு அதிர்ச்சிக்கொடுத்த ரோமா!!!

roma vs barcelona champions league 2018

(roma vs barcelona champions league 2018)

செம்பியன்ஸ் லீக் உதைப்பந்தாட்ட தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதியின் இரண்டாவது லீக் போட்டியில் ரோமா அணியிடம் பார்சிலோனா அணி அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளது.

பார்சிலோனா மற்றும் ரோமா அணிகளுக்கிடையிலான போட்டி இத்தாலியின் ஒலிம்பிக்கோ மைதானத்தில் நடைபெற்றது.

காலிறுதியின் முதல் லீக் போட்டியில் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதியை தக்கவைத்திருந்தது.

இன்று நடைபெறும் போட்டியில் ரோமா அணிக்கு வெற்றிபெறும் வாய்ப்பு குறைவாக இருந்த போதும், எதிரணியின் மைதானத்தில் கோலடித்ததன் ஊடாக ரோமா அணி வெற்றிபெற்றுள்ளது.

இன்று அதிகாலை நடைபெற்ற இந்த போட்டியில் ரோமா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

ரோமா அணிசார்பில் ஷெகோ 6வது நிமிடத்தில் ஒரு கோலையும், டி ரோஸி 58வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஒரு கோலையும் அடிக்க, மனோல்ஸ் 82வது நிமிடத்தில் கோலடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

இதன்படி இரு அணிகளுக்குமிடையிலான காலிறுதியின் முதல் லீக் போட்டியில் ரோமா அணி பார்சிலோனாவின் சொந்த மைதானத்தில் ஒரு கோலை அடித்திருந்ததால் வெற்றி ரோமா அணிக்கு வழங்கப்பட்டது.

<<Related News>>

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here