10 வருடங்களுக்கு பின்னர் சம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் லிவர்பூல்…

manchester city vs liverpool Champions League 2018

(manchester city vs liverpool Champions League 2018)

செம்பியன்ஸ் லீக் அரையிறுதிப்போட்டிக்கு கடந்த 10 வருடங்களில் முதலாவது தடவையாக லிவர்பூல் அணி தகுதிபெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற காலிறுதியின் இரண்டாவது லீக் போட்டியில் விளையாடிய லிவர்பூல் அணி, பிரீமியர் லீக்கில் முதற்தர அணியாக திகழ்ந்து வரும் மென்செஸ்டர் சிட்டி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

காலிறுதியின் முதல் லீக் போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த மென்செஸ்டர் அணி, இன்றைய போட்டியில் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.

போட்டி ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியின் ஜீசஸ் கோலடித்து அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார்.

பின்னர் நம்பிக்கையுடன் விளையாடிய மென்செஸ்டர் சிட்டி அணிக்கு தொடர்ச்சியான ஏமாற்றங்களே காத்திருந்தன. மிகுதி நேரங்களில் மென்செஸ்டர் சிட்டி அணி கோலடிக்க தவறிய நிலையில், லிவர்பூல் அணி இரண்டாவது பாதியில் சல்ஹா (56) மற்றும் பையர்மினோ (77) ஆகியோரின் கோல்களின் உதவியுடன் 2-1 என வெற்றிபெற்றது.

இந்நிலையில் காலிறுதியின் இரண்டு லீக் போட்டிகளிலும் சேர்த்து லிவர்பூல் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அரையிறுதிக்கு நுழைந்தது.

<<Related News>>

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here