வொல்வோ பகிரங்க டென்னிஸின் சம்பியன் பட்டத்தை வென்றார் கிகி பெர்டென்ஸ்!

Kiki bertens wins Volvo Car Open 2018

(Kiki bertens wins Volvo Car Open 2018)

அமெரிக்காவின் தென் கரோலினாவில் நடைபெற்று முடிந்த மகளிருக்கான வொல்வோ பகிரங்க டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கிகி பெர்டென்ஸ் வெற்றிபெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 27ம் நிலை வீராங்கனையான பெர்டென்ஸ், ஜேர்மனயின் 11ம் நிலை வீராங்கனை ஜூலியா கோர்கஸை எதிர்கொண்டு விளையாடினார்.

ஆரம்பம் முதல் ஆதிக்கத்தை செலுத்தி விளையாடிய பெர்டென்ஸ் 2-0 என்ற நேர் செட் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினார்.

இறுதிப்போட்டி என்ற அழுத்தத்தை மறந்து விளையாடிய பெர்டென்ஸ் முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய பெர்டென்ஸ், இரண்டாவது செட்டை 6-1 என கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தை தட்டித்சென்றார்.

<<Related News>>

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here