சங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்!!!

Hasitha Boyagoda wins Ryde Gold Medal

(Hasitha Boyagoda wins Ryde Gold Medal)

இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார வென்றிருந்த கண்டி திரித்துவ கல்லூரியின் “ரைட் தங்க பதக்கத்தினை” இம்முறை இளம் வீரர் ஹசித பொயாகொட வென்றுள்ளார்.

கண்டி திரித்துவக் கல்லூரியை பொருத்தவரையில், கல்லூரியின் சகலதுறைகளிலும் சிறந்து விளங்கும் வீரருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

கண்டி திரித்துவக் கல்லூரியின் மிகவும் உயரிய விருதாகவும் இந்த விருது பார்க்கப்பட்டு வருகின்றது.

குறித்த விருதை இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்கார 1996ம் ஆண்டு வென்றிருந்தார்.

தற்போது இந்த விருதினை ஹசித பொயாகொட வென்றுள்ளார். ஹசித பெயாகொட இலங்கை 19 வயதுக்குற்பட்டோர் அணிக்காக விளையாடி வருகின்றார். இவர் 19 வயதுக்குற்பட்டோர் கிரிக்கெட்டில் இன்னிங்ஸொன்றி அதிக ஓட்டத்தை எடுத்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவ்வருடம் நடைபெற்ற 19 வயதுக்குற்பட்டோர் உலகக்கிண்ண தொடரின் நியூஸிலாந்து அணிக்கெதிரான போட்டியில் பொயாகொட 158 பந்துகளில் 191 ஓட்டங்களை விளாசி அசத்தியிருந்தார்.

அதுமாத்திரமின்றி கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் வணிகப்பிரிவில் பரீட்சை எழுதிய இவர், 3 A சித்திகளை பெற்று சித்திப்பெற்றதுடன், மாவட்ட மட்டத்தில் 62வது இடத்தையும் பிடித்தார்.

இவ்வாறு கல்வியிலும், கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கும் ஹசித பொயாகொடவுக்கு எமது வாழ்த்துகள்.

<<Related News>>

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here