எதிரணி வழங்கிய கோலால் தப்பித்தது பிஎஸ்ஜி!

paris saint germain vs saint etienne news Tamil

(paris saint germain vs saint etienne news Tamil)

பிரென்ச் லீக் 1 உதைப்பந்தாட் தொடரில் பாரிஸ் செயின் ஜெர்மைன் அணி சுவாரஷ்யமான முறையில் தோல்வியிலிருந்து தப்பிக்கொண்டது.

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் செயிண்ட்-எடின்னே அணி தங்களது சொந்த மைதானத்தில், பிஎஸ்ஜி அணியை எதிர்த்தாடியது.

சொந்த ரசிகர்களுக்கு முன்னால் விளையாடிய செயிண்ட்-எடின்னே ஆரம்பத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலிருக்கும் அணி பிஎஸ்ஜி. எனினும் தங்களது உத்திகளை சிறப்பாக கையாண்ட செயிண்ட்-எடின்னே அணி முதல் கோலை அடித்தது. போட்டியின் 17வது நிமிடத்தில் கெபல்லா கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதன்படி 1-0 என முதற்பாதியும் நிறைவுக்கு வந்தது.

இரண்டாவது பாதியிலும் பி.எஸ்.ஜி அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த, செயிண்ட்-எடின்னே அணியின் முன்னிலை அப்படியே இருந்தது.

எனினும் போட்டியில் மேலதிகமாக வழங்கப்பட்ட நேரத்தில், செயிண்ட்-எடின்னே அணி வீரர் டெபுசே, தங்களது சொந்த கோல் எல்லைக்குள் கோலடித்து, பி.எஸ்.ஜி அணிக்கு கோலை வழங்கினார்.

இதன்படி இறுதிவரை கோலடிக்காமல், எதிரணி வழங்கிய கோலால் பிஎஸ்ஜி அணி 1-1 என தோல்வியிலிருந்து தப்பியது.

<<Related News>>

<<Tamil News Group websites>>

paris saint germain vs saint etienne news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here