பொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக!!!

Indika Dissanayaka won Silver medal Commonwealth Games

(Indika Dissanayaka won Silver medal Commonwealth Games)

பொதுநலவாய ஒன்றிய நாடுகளின் விளையாட்டு விழாவில் இலங்கையின் பளுதூக்கல் வீர, வீராங்கனைகள் நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

நேற்றைய தினம் பளுதூக்கல் போட்டிகளில் இரண்டு வெண்கலப்பதக்கத்தை வென்னிருந்த இலங்கை, இன்று வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.

இலங்கை அணி சார்பில் ஆண்களுக்கான 69 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட இந்திக திசாநாயக்க இந்த வெள்ளிப்பதக்கத்தினை வென்றுக்கொடுத்துள்ளார்.

இவர் ஸ்னெட்ச் முறையில் 136 கிலோகிராமையும், கிலீன் என்ட் ஜெர்க் முறையில் 160 கிலோகிராமையும் சேர்த்து மொத்தமாக 297 கிலோகிராம் எடையை தூக்கி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்த போட்டியின் முதலிடத்தை வேல்ஸைச் சேர்ந்த கெரீத் ஈவன்ஸ் தங்கப்பதக்கத்தையும், இந்தியாவின் தீபக் லெதர் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் பொதுநலவாய ஒன்றிய நாடுகளின் விளையாட்டு விழாவில் இலங்கை தற்போது ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<Related News>>

<<Tamil News Group websites>>

Indika Dissanayaka won Silver medal Commonwealth Games

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here