இலங்கைக்கு மீண்டுமொரு பதக்கம்!!! : தங்கம் வென்றது இந்தியா!

Dinusha Gomes wins Bronze medal Gold Coast

(Dinusha Gomes wins Bronze medal Gold Coast)

பொதுநலவாய ஒன்றிய நாடுகளின் விளையாட்டு விழாவில் இலங்கை மீண்டுமொரு வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது.

மகளிருக்கான 49 கிலோகிராம் எடைப்பிரிவின் பளுதூக்கல் போட்டியில் பங்கேற்ற தினுஷா கொமேஷ் இலங்கைக்கு இரண்டாவது வெண்கலப்பதக்கத்தை வென்றுக்கொடுத்துள்ளார்.

பொதுநலவாய ஒன்றிய நாடுகளின் விளையாட்டு விழா அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் கோலாகலமாக நடைபெடைபெற்று வருகின்றது.

இதில் 49 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட தினூஷா கொமேஷ் ஸ்னெட்ச் முறையில் 70 கிலோகிராமையும், கிலீன் என்ட் ஜெர்க் முறையில் 85 கிலோகிராமையும் தூக்கி மொத்தமாக 155 கிலோகிராம் எடையை தூக்கி வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்த போட்டியின் தங்கப்பதக்கத்தை இந்திய வீராங்கனை சானு சைக்ஹோம் மிராபாய் வென்றதுடன், வெள்ளிப்பதக்கத்தை மொரிஷியஸ் வீராங்கனை ரொய்ல்யா ரணைவோசாவா வென்றார்.

இதேவேளை இலங்கை சார்பில் 56 கிலோகிராம் எடைப்பிரிவு பளுதூக்கல் போட்டியில் பங்கேற்ற சதுரங்க லக்மால் இன்று வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<<Related News>>

<<Tamil News Group websites>>

Dinusha Gomes wins Bronze medal Gold Coast

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here