கோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை!

commonwealth games 2018 Sri Lanka wins first medal

commonwealth games 2018 Sri Lanka wins first medal

பொதுநலவாய ஒன்றிய நாடுகளின் விளையாட்டு விழாவில் இன்று இலங்கை தங்களது முதல் பதக்கத்தை வென்றுள்ளது.

பொதுநலவாய ஒன்றிய நாடுகளின் விளையாட்டு விழா அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெடைபெற்று வருகின்றது.

இதில் பளுதூக்கல் போட்டியில் இலங்கை சார்பில் 56 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட சதுரங்க லக்மால் வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.

சதுரங்க லக்மால் ஸ்னெட்ச் முறையில் 114 கிலோகிராமையும், கிலீன் என்ட் ஜெர்க் முறையில் 134 கிலோகிராமையும் தூக்கி மொத்தமாக 248 கிலோகிராம் எடையை தூக்கி வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.

தங்கப்பதக்கத்தை மலேசியாவின் முஹமட் அஷோரி ஹெஷல்வா. இசார் அஹமட் வென்றதுடன், வெள்ளிப்பதக்கத்தை குருராஜா வென்றுள்ளார்.

<<Related News>>

<<Tamil News Group websites>>

commonwealth games 2018 Sri Lanka wins first medal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here