சமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்!!!

slc super provincial tournament scorecard

slc super provincial tournament scorecard

இலங்கையில் நடைபெற்று வரும் நான்கு மாகாணங்களுக்கு இடையிலான உள்ளூர் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் சமனிலையில் முடிவடைந்துள்ளன.

தம்புள்ளை – கண்டி அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி முதல் இன்னிங்ஸில் 480 ஓட்டங்களை குவிக்க, கண்டி அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 364 ஓட்டங்களை குவித்தது.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி 256 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 2 விக்கட்டுகளை இழந்து 221 ஓட்டங்களை பெற்றிருந்த போது போட்டி நிறுத்தப்பட்டது.

இதேவேளை காலி – கொழும்பு ஆகிய அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டியும் சமனிலையில் முடிவடைந்தது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 476 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், தங்களது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி 333 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்நிலையில் மீண்டும் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி 177 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்திருந்த போது போட்டி நிறுத்தப்பட்டு, சமனிலையில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இரண்டு போட்டிகளின் முடிவுகளின் படி புள்ளிப்பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தம்புள்ளை அணி 13.08 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், காலி அணி 12.39 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், கண்டி அணி 5.93 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், கொழும்பு அணி 3.62 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

<<Related News>>

<<Tamil News Group websites>>

slc super provincial tournament scorecard

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here