மீண்டும் களமிறங்குகிறார் மெத்தியூஸ்!!! : மாகாணங்களுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது!!!

Super Four Provincial Squads Released news Tamil

(Super Four Provincial Squads Released news Tamil)

இலங்கையின் நான்கு மாகாணங்களை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள நான்கு அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் இம்மாதம் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு, கண்டி, காலி மற்றும் தம்புள்ளை என பெயரிடப்பட்டுள்ள நான்கு அணிகள் இந்த போட்டித் தொடரில் பங்கேற்கின்றன.

கொழும்பு அணியின் தலைவராக தினேஸ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், கண்டி அணிக்கு எஞ்சலோ மெத்தியூஸ், காலி அணிக்கு சுராங்க லக்மால் மற்றும் தம்புள்ளை அணிக்கு திமுத் கருணாரத்ன ஆகியோர் அணித்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று நாள் போட்டியாக நடத்தப்படும் இந்த தொடரின் போட்டிகள் கட்டுநாயக்க, அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானம் மற்றும் தம்புள்ளை ரங்கிரி மைதானங்களில் நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்களது எதிரணிகளுடன் தலா ஒவ்வொரு முறை மோதவுள்ளன.

இந்த தொடரின் இரண்டு போட்டிகள் பகலிரவு போட்டிகளாக (இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்படும்) நடைபெறவுள்ளன.

இதேவேளை இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எஞ்சலோ மெத்தியூஸ், உபாதைக்கு பின்னர் முதல் தடவையாக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

<<Related News>>

<<Tamil News Group websites>>

Super Four Provincial Squads Released news Tamil

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here