இந்தியன் வேல்ஸ் காலிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ்!

Vinus Williams Indian Wells 2018

(Vinus Williams Indian Wells 2018)

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இந்தியன் வேல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் தகுதிபெற்றுள்ளார்.

இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகின்றது.

இதில் இன்று நடைபெற்ற போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ், லட்வியாவின் அனெஸ்டெசிஜா செவஸ்டோவாவை 2-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

போட்டியின் இரண்டு செட்களிலும் அபாரமாக ஆடிய வீனஸ் 7-6 (8-6) மற்றும் 6-4 என வெற்றிபெற்றார்.

இதேவேளை மற்றுமொரு போட்டியில் சீனாவின் வாங் கியாங்கை எதிர்கொண்ட ரோமானியாவின் முதல்நிலை வீராங்கனை சிமோன ஹலீப் 7-5 மற்றும் 6-1 என வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

<<Related News>>்

<<Our other websites>>

 Tags : Vinus Williams Indian Wells 2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here