இந்தியா – பங்களாதேஷ் இன்று மோதல்!!! : முடிவை எதிர்பார்க்கும் இலங்கை!

India vs Bangladesh 2nd T20 Nidahas Trophy 2018

(India vs Bangladesh 2nd T20 Nidahas Trophy 2018)

இந்தியா – பங்களாதேஷ் அணிக்கெதிரான முத்தரப்பு இருபதுக்கு-20 போட்டியின் ஐந்தாவது போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற நான்கு போட்டிகளில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், இலங்கை அணி ஒரு போட்டியிலும் பங்களாதேஷ் அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியானது இந்திய அணியை விட இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு முக்கியமாக அமைந்துள்ளது.

பங்களாதேஷ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதற்கு இன்றைய போட்டியில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதேவேளை பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றாலும் அல்லது தோல்வியடைந்தாலும் நாளை மறுதினம் நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறவேண்டும்.

எனினும் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றால் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புள் உள்ளன.

இதுவரையில் நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளது.

<<Related News>>்

<<Our other websites>>

 Tags : India vs Bangladesh 2nd T20 Nidahas Trophy 2018

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here