இலங்கையின் முதலாவது செயற்கை புற்தரை மைதானத்தை திறந்து வைத்த விளையாட்டுத்துறை அமைச்சர்!

Sri Lankas first-ever artificial football turf opened

(Sri Lankas first-ever artificial football turf opened)

கொழும்பு கோட்டே – பெத்தகானவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை புற்தரை கொண்ட உதைப்பந்தாட்ட மைதானத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உத்தியோகபூர்வமாக திறந்துவைத்துள்ளார்.

கொழும்பு கோட்டே – பெத்தகானவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை புற்தரை கொண்ட உதைப்பந்தாட்ட மைதானத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உத்தியோகபூர்வமாக திறந்துவைத்துள்ளார்.

இந்த மைதானமானது சர்வதேச உதைப்பந்தாட்ட போட்டிகளை நடத்துவதற்கு உகந்த வகையில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் நிதி உதவியினால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானத்துக்காக சர்வதேச உதைப்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை ரூபாயில் சுமார் 7.5 கோடிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 40 வீரர்கள் மற்றும் 15 அதிகாரிகள் தங்கியிருந்து பயிற்சிகளைப் பெறுவதற்கான அனைத்து வசதிகளும் இந்த மைதானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தங்குமிடம், உடற் பயிற்சி கூடம் மற்றும் கேட்போர்கூடமொன்றும் இந்த உதைப்பந்தாட்ட மைதான வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை செயற்கை புற்தரை மைதானத்தில் ஒரு கண்காட்சி போட்டியொன்றும் நடைபெற்றுள்ளது.

இதில் பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் அணி, உதைப்பந்தாட்ட அதிகாரிகள் அணியை 6-1 என வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது.

<<Related News>>

<<Our other websites>>

 Tags : Sri Lankas first-ever artificial football turf opened

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here