ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியது நீதிமன்றம்!!!

Ramith Rambukwellas driving license suspended

(Ramith Rambukwella driving license suspended)

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமத்திப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மதுபோதையுடன் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டுக்காகவே இவரது சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்ல கடந்த 9ம் திகதி தனது வாகனத்தை செலுத்திச்சென்று நாவல பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதியுள்ளார்.

பின்னர் குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் தாக்க முற்பட்டுள்ளதுடன், துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் ரமித் ரம்புக்வெல்லவை கைதுசெய்த பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

குறித்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரமித் ரம்புக்வெல்ல கடந்த 2016ம் ஆண்டும் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<<Related News>>

<<Our other websites>>

 Tags : Ramith Rambukwellas driving license suspended

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here