பிரீமியர் லீக் தொடரில் வெற்றிநடை போடும் மென்செஸ்டர் சிட்டி!

Manchester City vs Stoke City news Tamil

(Manchester City vs Stoke City news Tamil)

பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை வகிக்கும் மென்செஸ்டர் சிட்டி அணி, ஸ்டொக் சிட்டி அணியை இலகுவாக வீழ்த்தியுள்ளது.

மென்செஸ்டர் சிட்டி அணி , ஸ்டொக் சிட்டி அணியை பிரிடென்னியா மைதானத்தில் எதிர்கொண்டது.

போட்டியின் முதற்பாதியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், மென்செஸ்டர் அணி மாத்திரம் தங்களது முதல் கோலை அடித்தது.

10வது நிமிடத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியின் டேவிட் சில்வா குறித்த கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

முதற்பாதியில் 1-0 என முன்னிலை வகித்த மென்செஸ்டர் சிட்டி அணி, இரண்டாவது பாதியிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தியது. சிறப்பாக விளையாடிய டேவிட் சில்வா 50வது நிமிடத்தில் மீண்டுமொரு கோலை அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

போட்டியின் இறுதிவரை போராடியும் ஸ்டொக் சிட்டி அணியால் கோலடிக்க முடியவில்லை.

இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் அடிப்படையில் மென்செஸ்டர் சிட்டி அணி 81 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. (Football news in Tamil

<<Related News>>

<<Our other websites>>

 Tags : Indian Wells Tennis 2018 Venus Williams)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here