தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரருக்கு தடை!!!

Kagiso Rabada Suspended Two Tests news Tamil

(Kagiso Rabada Suspended Two Tests news Tamil)

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கார்கிஸோ ரபாடாவுக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் பந்து வீச்சில் அசத்திய ரபாடா முதல் இன்னிங்ஸில் 5 விக்கட்டுகளை வீழ்த்தியதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.

குறித்த போட்டியின் போது அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கட்டை கைப்பற்றிய ரபாடா, அவரின் அருகில் சென்று முறையற்ற ரீதியில் அவருக்கு பிரியாவிடை கொடுத்தார்.

சம்பவம் குறித்து விசாரணை செய்த போட்டி மத்தியஸ்தர் ஐசிசியிடம் முறைப்பாட்டை தெரிவிக்க, ரபாடாவுக்கு இரண்டு போட்டிகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ரபாடாவுக்கு விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

<<Related News>>

<<Our other websites>>

 Tags : Kagiso Rabada Suspended Two Tests news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here