செரீனா வில்லியம்ஸை வீழ்த்திய வீனஸ்!!!

Indian Wells Tennis 2018 Venus Williams

(Indian Wells Tennis 2018 Venus Williams)

இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடரின் மூன்றாது சுற்றில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸிடம், செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்று இன்று நடைபெற்றது.

இதன் இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் இரட்டை சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீனஸ் வில்லியம்ஸ் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

முதல் செட்டை 6-3 என இலகுவாக கைப்பற்றிய வீனஸ், இரண்டாவது செட்டையும் 6-4 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

வீனஸ் வில்லியம்ஸ் தனது அடுத்த சுற்றில் லட்வியாவின் அனெஸ்டெசிஜா செவஸ்டோவாவை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Related News>>

<<Our other websites>>

 Tags : Indian Wells Tennis 2018 Venus Williams

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here