இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் மூன்றாவது சுற்றில் பெடரர் வெற்றி!

Indian Wells Open 2018 Roger Federer news Tamil

(Indian Wells Open 2018 Roger Federer news Tamil)

இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுக்கு சுவிஸ்லாந்தின் முதல்நிலை வீரர் ரொஜர் பெடரர் தகுதிபெற்றுள்ளார்.

இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகின்றது.

இதன் இரண்டாவது சுற்றில் ஆர்ஜன்டீனாவின் பெடரிகோ டெல்பொனிஸை வெற்றிக்கொண்ட பெடரர் மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

இன்று நடைபெற்ற மூன்றாவது சுற்றில் சேர்பியாவின் பிலிப் கிரஜினோவிச்சை எதிர்கொண்ட பெடரர் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

முதல் செட்டை 6-2 என இலகுவாக கைப்பற்றிய பெடரர், இரண்டாவது செட்டையும் 6-1 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

பெடரர் நான்காவது சுற்றில் பிரான்சின் ஜெரமி சார்டியை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Related News>>

<<Our other websites>>

 Tags : Indian Wells Open 2018 Roger Federer news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here